ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகும் நாடு !

Report Print M.M.Nilamdeen M.M.Nilamdeen in அரசியல்

மாகாண தேர்தலை நடத்துவது என்பது அதிபர் மைத்திரியின் நிலைப்பாடு, ஆனால் அதிபர் தேர்தலை நடத்துவது என்பது பிரதமர் ரணிலின் நிலைப்பாடு.

அதனால் மாகாண தேர்தலை நடத்துவது என்று சர்வகட்சி தலைவர்களை அழைப்பது கூட்டுவது என்று நாட்களை கடத்துவது பிரதமர் ரணிலின் தந்திரம். இந்த தந்திரம் அடங்கிய செய்தி அதிபர் மைத்திரிக்கு உளவுப்பிரிவு கொடுத்துள்ளது.

அதனால் இந்த தந்திரத்தை உடைத்து மாகாண தேர்தலை நடத்துவது என்ற முடிவுக்கு அதிபர் மைத்திரி வந்துள்ளார். அதற்கான முழு வீச்சில் அதிபர் நகர்வுகளை செய்ய திட்டமிட்டுள்ளார்.

அந்த நகர்வின் ஒரு அங்கம்தான் மாகாணசபைத் தேர்தல்களை உடனடியாக நடத்த தேர்தல்கள் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி, உச்சநீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நீதிமன்றம் தேர்தலை நடத்துமாறு தேர்தல்கள் ஆணையத்துக்கு உத்தரவு வழங்கினாலும் அதில் ஒரு சிக்கல் உள்ளது. அதாவது மாகாண தேர்தல் புதிய முறையிலா அல்லது பழைய முறையிலா என்ற குழப்பம் இன்னும் தீரவில்லை. அதனால் நீதிமன்றம் உத்தரவு கொடுத்தாலும் பழைய முறையா ?அல்லது புதிய முறையா என்று மீண்டும் நாடாளுமன்றில் ஒரு சட்டம் கொண்டு வரப்படவேண்டும்.

இலங்கையில் ஜனநாயகம் நிலை நாட்டப்பட்ட வேண்டும் என்று மூக்கை நுழைத்த வெளிநாட்டு சக்திகள் மாகாண தேர்தலை நடத்துவதற்கு ரணிலுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற ஒரு நகர்வை அதிபர் செய்திருந்தார்.

இதேவேளை முன்னாள் அதிபர் சந்திரிகா அதிபர் மைத்திரியை தோற்கடிக்கும் ஒரு நகர்வை செய்து வருகின்றார். அதற்காக முன்னாள் அமைச்சர் குமார வெல்கமவை அதிபர் தேர்தலில் களமிறக்கும் ஒரு நகர்வில் உள்ளார்.

ஐதேக சார்பில் ரணில் களமிறங்கும் முடிவில் இல்லை. அதாவது அதிபர் தேர்தலில் மஹிந்தவின் மொட்டுக் கட்சி சார்பாக யார் களமிறங்குவது? சுதந்திரக்கட்சியின் சார்பாக யார் களமிறங்குவது? என்ற நிலைப்பாடு வெளியாகும் போதுதான் ரணிலின் நிலைப்பாடு வெளியாகும் என்து ரணிலின் திட்டம்.

மொட்டு அணியும் சுதந்திரக்கட்சியும் இணைந்து அதிபர் மைத்திரியை அதிபர் தேர்தலில் களமிறக்கும் ஒரு முடிவில்தான் மஹிந்த உள்ளார்.

எது எப்படியோ மாகாண தேர்தல் இப்போது நடக்கும் அல்லது நடத்தும் வாய்ப்பு இல்லை என்பதே உண்மை.

வழக்கு தாக்கல்

மாகாணசபைத் தேர்தல்களை உடனடியாக நடத்த தேர்தல்கள் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உண்மை தேடுவோர் என்ற அமைப்பின்” சார்பில், சட்டத்தரணி பிரேமநாத் டொலேவத்த இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

இவர் மகிந்த ராஜபக்சவுக்கு நெருக்கமானவர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த மனுவில் பிரதிவாதிகளாக தேர்தல்கள் ஆணைக்குழு, தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

எல்லைகளை வரையறுக்கும் அறிக்கையைக் காரணம் காட்டி அரசாங்கம் மாகாணசபைத் தேர்தலைப் பிற்போடுவதாக மனுதாரர் கூறியுள்ளார்.

மாகாணசபைத் தேர்தல்களை விரைவாக நடத்தும்படி, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உத்தரவிடுமாறும், அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

ஆம் தேர்தல்களை விரைவாக நடத்தும்படி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் நிலை ஒன்றும் உள்ளதாம்.

ஆனால் தீர்ப்பு அப்படி வந்தாலும் நாடாளுமன்றில் புதிய சட்டம் கொண்டு வரவேண்டும் எல்லைநிர்ணயம் இன்னும்முடியவில்லை என்று சட்ட மா அதிபர் வியாக்கியானம் கொடுக்கலாம் .இவைகளை காரணம் காட்டி ரணில் அரசு 5 மாதங்களுக்கு இழுத்தடிக்கும் முழு நோக்கம் உள்ளதாம்.

செப்டம்பர் திகதி அறிவிக்கப்படும்

அதனால் எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தலுக்கான திகதியை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் நிலைக்கு வந்துள்ளது. எது எப்படியானாலும் ஜனாதிபதி தேர்தல் நடத்துவதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளில் அரசு முழு முயற்சியில் உள்ளது. எந்தவொரு நிலையிலும் மாகாண தேர்தலை நடத்தும் நிலைப்பாடில் ரணில் இல்லை .

ஐதேக சார்பாக ரணில் போட்டியிடும் நோக்கம் முற்றாக இல்லை. அதனால் சபாநாயகர் கரு ஜெயசூர்யவை களமிறக்கும் எண்ணத்தில் ரணில் உள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மை கட்சிகளின் ஆதரவு எந்தப்பக்கம் உள்ளது .ஜேவிபி யின் நிலைப்பாடு என்ன என்பதை பொறுத்தே வெற்றி வாய்ப்பு அமையும். ஜேவிபி தனியாக ஜனாதிபதி தேர்தலில் களம் இறங்கினால் நாட்டில் சுமார் 3-4 லட்சம் சிங்கள வாக்குகள் பிரியும். அதனால் யாருக்கும் 51 வீதம் வாக்குகள் கிடைக்காது .

அதனால் மைத்திரி அணியும் ரணில் அணியும் முஸ்லிம் தமிழ் வாக்குகளை நம்பிக்கையோடு எதிர்பார்க்க வேண்டும்.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஜனாதிபதி வேட்பாளர்களின் பெயர்கள் வெளியாகட்டும் அப்போது வெற்றி பெறப்போகும் புதிய ஜனாதிபதி யார் ? வெற்றி தோல்வி பற்றிய முழு ஆய்வொன்றை அப்போது பார்ப்போம் ஜனாதிபதி தேர்தலை எதிர்பார்ப்போம்.