மகிந்த - மைத்திரி தரப்பினரிடையே அவசர சந்திப்பு!

Report Print Murali Murali in அரசியல்

ஸ்ரீலங்கா சுந்திர கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுசன பெரமுன ஆகிய கட்சிகளை சேர்ந்தவர்கிளிடையே அவசர சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச தரப்பினர் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தரப்பை சேர்ந்தவர்கள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டு பேசவுள்ளனர்.

இந்த சந்திப்பு எதிர் வரும் வியாழக்கிழை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது ஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சமசரக்குழு உறுப்பினர்களான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், ஜகத் வெல்லவத்த மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

சுதந்திர கட்சி சார்பில் ரோஹன லக்ஷ்மன் பியதாச, சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர மற்றும்நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதன்போது தேர்தலில் வழுவான கூட்டணி அமைத்தல் மற்றும் சுதந்திர கட்சியுடன் சமரசத்தை ஏற்படுத்தி ஒரு சின்னத்தின் கீழ் போட்டியிடுதல் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40வது கூட்டதொடர் ஜெனஜவாவில் இம்பெற்று வருகின்ற நிலையில், இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.