பிரதேச அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்

Report Print Mubarak in அரசியல்

திருகோணமலை மாவட்ட தம்பலகாமம் பிரதேசத்தின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் மத்திய குழுவினர், வர்த்தக வாணிப கைத்தொழில் கூட்டுறவு மற்றும் நீண்ட காலம் இடம்பெயர்ந்தோரை மீளக்குடியேற்றுதல் அமைச்சரும் கட்சியின் தேசிய தலைவருமான றிசாத் பதியூதீனை சந்தித்துள்ளனர்.

குறித்த சந்திப்பு நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று இடம் பெற்றுள்ளது.

இதன்போது மத்திய குழுவினர் அமைச்சரை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன், பிரதேச அபிவிருத்தி தொடர்பாகவும் தங்களது கருத்துக்களையும் முன்வைத்துள்ளனர்.

விவசாய நன்னீர் மீன்பிடி தொடர்பான விடயங்களை இராஜாங்க அமைச்சர் அமீர் அலியிடம் முன்வைத்துள்ளனர்.

திருகோணமலை மாவட்டத்துக்கு விரைவில் விஜயம் செய்யவுள்ளதாகவும், கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாகவும் இதன் போது அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

குறித்த கலந்துரையாடலில் , விவசாய மீன்பிடி கிராமிய கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எம்.அமீர் அலி , மத்திய குழு தலைவர் தாலிப் அலி, பிரதேச சபை உறுப்பினர் ரஜீன் உட்பட ஏனைய மத்திய குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளனர்.