தோட்டத்தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் அமைச்சரவைப் பத்திரம்

Report Print Kanmani in அரசியல்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 50 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்கான அமைச்சரவைப் பத்திரம் நாளை சமர்ப்பிக்கப்படவுள்ளதாக, பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர்,

“எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதியிலிருந்து அமுலாகும் வகையில் இந்தக் கொடுப்பனவை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஒரு வருடத்திற்கு மாத்திரமே இந்தக் கொடுப்பனவை வழங்க இணக்கம் காணப்பட்டுள்ளது. நாடாளுமன்ற குழுவொன்றினை அமைத்தாவது இது தொடர்பில் ஆராய வேண்டியுள்ளது.

பெருந்தோட்டத்துறையின் முக்கியத்துவத்தை தெளிவுப்படுத்தி பொருளாதாரத்தினை கட்டியெழுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

73 சதவீதமான தேயிலை உற்பத்தி சிறுதோட்ட உற்பத்தியாளர்களிடமிருந்து தற்போது கிடைக்கப் பெறுகின்றது.

உற்பத்தி வீழ்ச்சியடையும் நிலையில் தோட்டத்தொழிலாளர்களின் எண்ணிக்கையும் குறைந்துக்கொண்டு வருகின்றது” எனவும் தெரிவித்துள்ளார்.