இலங்கை குறித்த தீர்மானத்தை சமர்ப்பித்தது பிரித்தானியா!

Report Print Murali Murali in அரசியல்

இலங்கை குறித்த புதிய தீர்மானம் ஒன்றை பிரித்தானியா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இன்று தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40வது கூட்ட தொடர் ஜெனிவாவில் தற்போது இடம்பெற்று வரும் நிலையில், இலங்கை குறித்த இந்த புதிய தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

A/HRC/40/L.1 என்ற இந்த தீர்மானத்திற்கு கனடா, ஜெர்மனி, மொண்டிநீக்ரோ, வடக்கு மசடோனியா, பிரித்தானியா மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகிய நாடுகள் அனுசரனை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த இந்த தீர்மானத்திற்கு இலங்கையும் இணை அனுசரனை வழங்கும்” என எதிர்பார்த்திருப்பதாக அந்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.