ஐ.நா-வின் நல்லெண்ணத் தூதராக இந்திய நடிகை நியமனம்

Report Print Kanmani in அரசியல்

ஐ.நா. வளர்ச்சித்திட்டத்தின் (UNDP) நல்லெண்ணத் தூதராக பத்மலட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார்.

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி இதற்கான அறிவிப்பை ஐ.நா. சபையால் வெளியிடப்பட்டுள்ளது.

கேரளாவில் பிறந்து சென்னையில் வளர்ந்த 48 வயதுடைய அமெரிக்க, இந்திய நடிகை, மாடல் அழகி, சமையற்கலை வல்லுனர், தொலைக்காட்சி நட்சத்திரம், எழுத்தாளரும்,புகழ்பெற்ற எழுத்தாளர் சல்மான் ரு‌ஷ்டியின் முன்னாள் மனைவி ஆவார்.

குறித்த நியமனம் பற்றிய தகவலை UNDP தலைமையகத்தில் பத்திரிகையாளர்கள் மத்தியில் நேற்று முன்தினம் வெளியிட்டுள்ளார். இதன் போது மேலும் தெரிவிக்கையில்,

பல நாடுகளில் வறுமை பெருமளவு ஒழிக்கப்பட்டுள்ளது. ஆனால், சமத்துவமின்மையை ஒழிக்க முடியவில்லை.

சமத்துவமின்மை விடாப்பிடியுடன் சமூகத்தில் இருக்கிறது. ஐ.நா. வளர்ச்சித் திட்டத்தின் நல்லெண்ணத் தூதர் என்ற வகையில், எனது முக்கிய கவனம், சமத்துவம் இல்லாத நிலை, பணக்கார நாடுகளில் மட்டுமல்ல ஏழை நாடுகளிலும் உள்ளது.

இது மக்களை பாதிக்கக்கூடும் என்ற உண்மையை வெளிச்சம் போட்டுக்காட்டுவேன் எனவும் தெரிவித்துள்ளார்.