பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இன்று வாக்கெடுப்பு நடைபெறுகின்றது!

Report Print Murali Murali in அரசியல்

2019ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு பரபரப்பான சூழ்நிலையில் இன்று நடைபெறுகிறது.

இதில் ஆளும் தரப்பு பெரும்பான்மை வாக்குகளினால் வெற்றியீட்டும் என ஆளும் தரப்பு அறிவித்துள்ள அதே வேளை வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிக்கப் போவதாக எதிரணி கூறியுள்ளன.

2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் கடந்த 5ஆம் திகதி நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் சமர்ப்பிக்கப்பட்டது. 6ஆம் திகதி முதல் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நடைபெற்றது.

இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று மாலை 5.00மணிக்கு நடைபெறவிருக்கிறது.

கடந்த வருட இறுதியில் ஏற்பட்ட அரசியல் குழப்ப நிலையையடுத்து எந்தத் தரப்பிற்கு பெரும்பான்மை பலம் உள்ளது என்ற சர்ச்சை ஏற்பட்டிருந்தது.

கடந்த ஆண்டு இறுதியில் ஏற்பட்டிருந்த அரசியல் குழப்பங்களுக்கு பின்னர் கொண்டு வரப்பட்ட வரவு செலவுத்திட்டம் பெரும் எதிரப்பார்பிற்கு மத்தியில் இன்று வாக்கெடுப்பு நடைபெறுகின்றது.

தமிழ்தேசிய கூட்டமைப்பின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்காதிருக்க முடிவு செய்துள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில் அரசாங்கம் வாக்கெடுப்பில் வெல்வது கடினம் என தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முழு ஆதரவுடன் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் வெற்றியீட்டப் போவதாக சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

ஊடகங்களில் பல்வேறு கருத்துகள் கூறப்பட்டாலும் பெரும்பான்மை வாக்குகளினால் சகல வாக்கெடுப்புகளிலும் வெற்றியீட்டுவது உறுதி எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், மக்கள் விடுதலை முன்னணி வரவு செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களிக்கப் போவதாக ஏற்கெனவே அறிவித்துள்ளது.

இதேவேளை இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்புக்கு ஆதரவாக வாக்களிப்பதா? இல்லையா? என இன்று கூடி தீர்மானிக்க இருப்பதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி சார்ள்ஸ் நிர்மலநாதன் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers