யாழ். மாநகரசபை கூட்டத்தில் உறுப்பினர்களுக்கிடையில் வாக்குவாதம்

Report Print Sumi in அரசியல்

யாழ். மாநகரசபையில் உறுப்பினர்களுக்கிடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

யாழ். மாநகர கேட்போர் கூடத்தில் இன்று காலை மாநாகரசபை கூட்டம் ஆரம்பமாகியுள்ளது.

கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் உறுப்பினர் ஒருவர் கம்பரெலிய திட்டம் குறித்து யாழ். மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்டிடம் வினவியுள்ளார்.

இதன்போது உறுப்பினர்களுக்கிடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

கம்பரெலிய திட்டம் குறித்த தெளிவின்மையே உறுப்பினர்களிடையே கருத்து முரண்பாடு ஏற்படுவதற்கான காரணம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Latest Offers