தேர்தல் நெருங்கும் போதே சிலருக்கு இனப்பற்றும் மதப் பற்றும் ஏற்படுகிறது

Report Print Steephen Steephen in அரசியல்

தேர்தல் நெருங்கும் போதே பலருக்கு சிங்கள இனப்பற்றும் பௌத்த மதப்பற்றும் ஏற்படுவதாக நீதியமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம் கட்சியை அடிப்படையாக கொண்டு சமுர்த்தியை வழங்குவதில்லை எனவும் மக்களின் வறுமையை அடிப்படையாக கொண்டே வழங்கப்படுவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

இரத்தினபுரி நிதித்திகலை, வந்தகலை பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.

சில நபர்கள் தற்போது நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுக்க முயற்சித்து வருகின்றனர்.

இவ்வாறான நடவடிக்கைகள் காரணமாக எவ்வளவு வளங்கள் இருந்தாலும் நாடு முன்னோக்கி செல்லாது எனவும் பின்நோக்கியே செல்லும் எனவும் தலதா அத்துகோரள குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers