மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான மனு திரும்பபெறப்பட்டுள்ளது

Report Print Steephen Steephen in அரசியல்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பிரதமராகவும் அமைச்சர்களும் தமது பதவிகளில் செயற்படுவதை தடைவிதித்து உத்தரவிட்ட சம்பவம் தொடர்பாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு திரும்பபெறப்பட்டுள்ளது.

இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் அர்ஜூன் ஒபேசேகர முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

அப்போது மனுவை தாக்கல் செய்திருந்த ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிகளின் 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, மனுவை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளார்.

இதற்கு அமைய மனுவை திரும்ப பெற மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மகிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்டமை மற்றும் அவரது அமைச்சரவையை சவாலுக்கு உட்படுத்தி கடந்த டிசம்பர் மாதம் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

Latest Offers