எனது அரசாங்கம் 19 நாட்களே செயற்பட்டது! மகிந்த ராஜபக்ச

Report Print Steephen Steephen in அரசியல்

52 நாட்கள் நிலவிய அரசியல் நெருக்கடி சம்பந்தமாக தமது தரப்பினர் மீது குற்றம் சுமத்தினாலும் உண்மையில் தனது அரசாங்கம் 19 நாட்களே அரசாங்கமாக இயங்கியது என எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் முறை வாசிப்பின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

2018ஆம் ஆண்டு ஒக்டோபர் 26ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்த அரசாங்கத்திற்கு நவம்பர் வரையே தடைகள் இன்றி செயற்பட முடிந்தது.

அதாவது 19 நாட்கள் மட்டுமே. அந்த குறுகிய காலத்தில் மக்களுக்கு வழங்கக்கூடிய நிவாரணங்களை வழங்கினோம்.

குறிப்பாக எரிபொருள் விலையை இரண்டு முறை குறைக்க முடிந்தது. இதனால் மக்களுக்கு பெரிய நன்மை ஏற்பட்டது. பசளை மானியத்தை மீண்டும் வழங்க முடிந்ததால், விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைத்தது.

மேலும் பல நிவாரணங்களை வழங்க நாங்கள் ஏற்பாடுகளை செய்திருந்த நேரத்தில் ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைந்து செய்த அரசியல் ஸ்திரமற்ற நிலைமை காரணமாக 19 நாட்களில் குறைந்தளவான சேவையை செய்ய முடிந்தது.

இந்த குறுகிய காலத்தில் 1000 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு முதலீட்டை எம்மால் பெற முடிந்த போதிலும் நவம்பர் 17ஆம் திகதி ஏற்பட்ட அரசியல் ஸ்திரமற்ற நிலைமையில் அதனை பெற்றுக்கொள்ள முடியாமல் போனது எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers