கோத்தபாய கொலைக்காரன் - மைத்திரி பைத்தியகாரன்! மேர்வின் சில்வா

Report Print Steephen Steephen in அரசியல்
553Shares

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, இலங்கையின் ஜனாதிபதியாக பதவிக்கு வந்தால், நாடு இரத்தகாடாக மாறும் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள அவரது வீட்டில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால், அனைவரும் தமது மரண பயணத்திற்கு தயாராக இருக்க வேண்டும். பாதுகாப்புச் செயலாளராக பதவி வகித்த போது வெள்ளை வானை கொண்டு கண்முன் தெரியாமல் ஆட்களை கொலை செய்ய முடியுமாயின், அந்த மனிதன் இந்த நாட்டின் ஜனாதிபதியானால், நாடு இரத்த காடாக மாறும்.

இராணுவத்தை சேர்ந்தவருக்கு கொடுக்க வேண்டுமாயின் இராணுவத்தில் கொலை செய்யாத சிறந்தவர்கள் இருக்கின்றனர். கோத்தபாயவை விட ஜெனரல் பொன்சேகா சிறந்தவர். அவரே போர் களத்தில் இருந்தார்.

கோத்தபாய குளிரூட்டிய அறையில் இருந்தார். போருக்கு அரசாங்கம் பணத்தை ஒதுக்கும் போது அதனை செலவிட வேண்டும். அது அவரது வேலை. எவ்வாறாயினும் கோத்தபாய ராஜபக்ச நாட்டின் ஜனாதிபதியாக பதவிக்கு வந்தால், ஹிட்லர், முசோலி போன்றவர்களை விட நிலைமை மோசமாக மாறும். குமார வெல்கம போன்றவர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் உள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை சேர்ந்த நிமல் சிறிபால டி சில்வா போன்றவர்கள் இருக்கின்றனர். கோத்தபாய ராஜபக்ச மட்டுமா இருக்கின்றார். ராஜபக்ச குடும்பம் சுத்தோதனன் (புத்த பகவானின் தந்தை) குடும்பமாக மாற முடியாது.

சித்தார்த்தன் (புத்தர்) குடும்பமாக மாற முடியாது. இதனை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். நானும் பொலியத்தவை சேர்ந்தவன் என்பதால், ராஜபக்ச குடும்பம் பற்றி எனக்கு நன்றாக தெரியும். பசில் ராஜபக்ச என்பவன் தரகு பணம் பெறுபவர்.

கோத்தபாய ராஜபக்ச என்பவன் கொலைக்காரன். இவர்கள் செய்த குற்றங்கள் குறித்து நான் சி.ஐ.டியில் முறைப்பாடு செய்தேன் இன்னும் விசாரணைகள் நடக்கவில்லை. மைத்திரிபால சிறிசேன என்பவன் பைத்தியகாரன். மைத்திரிபால சிறிசேனவுக்கு பதிலாக அங்கொடையில் இருந்து ஒருவரை தெரிவு செய்து ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்துவது அதனை விட சிறந்தது எனவும் மேர்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.