நாட்டில் உக்கிரமடைந்துள்ள பிரச்சினைகள்! தீர்வு இதுவே

Report Print Sinan in அரசியல்

நாட்டில் உக்கிரமடைந்துள்ள பிரச்சினைகளை தீர்க்க வேண்டுமாயின் தேர்தல் அவசியம், மாகாண சபை தேர்தலை நடத்துவதே தற்போதைய தேவை என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிப்பதற்கு இயலுமான முயற்சிகளை நம் மேற்கொள்வோம், அவ்வாறு நிகழும் பட்சத்தில் அரசியல் யாப்பிற்கு அமைய அமைச்சரவை ஒன்று இல்லாமல்போகும்.

அவ்வாறான ஒரு நிலைமையில் அரசாங்கம் ஒன்றை அமைக்குமாறு எமக்கு அழைப்பு கிடைக்கும் பட்சத்தில் நாம் அரசாங்கத்தை அமைக்கப்போவது இல்லை.

மாறாக தேர்தலை நடத்தி மக்களின் மனநிலையை அறிவதே எமது நோக்கம், நாட்டில் உக்கிரமடைந்துள்ள பிரச்சினைகளை தீர்க்க வேண்டுமெனின் தேர்தல் அவசியம். மாகாண சபை தேர்தலை நடத்துவதே தற்போதைய தேவை.

அரசாங்கத்தின் பாதீடு, அரசாங்கத்தின் கொள்கை ஆகியவற்றை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்களா? என்பதே தற்போதைய தேவை. அதனை வெளிப்படுத்த மக்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.

மாகாண சபைத் தேர்தலே அதற்கான ஒரே வழி. மக்களின் மனநிலையை அறிந்துகொள்ள மிக அவசியமான தேவை ஒன்று ஏற்பட்டுள்ளது. அதற்கு தேர்தலை நடத்துவது அவசியம் என குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers