2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் முறை வாசிப்பின் மீதான வாக்கெடுப்பின் போது திட்டத்தை எதிர்த்து வாக்களிக்க ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் முறை வாசிப்பின் மீதான வாக்கெடுப்பு இன்று மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.
அத்துடன் தேவை ஏற்பட்டால், ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீடு மீதான வாக்கெடுப்புக்கு ஆதரவாக வாக்களிப்பது எனவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.