ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு கால அவகாசம் கொடுக்க கூடாது

Report Print Sumi in அரசியல்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு கால அவகாசம் கொடுக்க கூடாது என்ற பிரேரணையை சபையில் எடுக்கமாட்டேன் என யாழ்.மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் பிடிவாதமாக குறிப்பிட்டுள்ளார்.

பிரேரணை எடுக்காத காரணத்தினால் சபையில் ஏனைய உறுப்பினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பாக முதல்வர் இலங்கை அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

யாழ்.மாநகர சபை அமர்வு இன்று யாழ்.மாநகர சபையில் முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு வருவதற்கு கோருவதும், தமிழ்த் தேசிய மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்புடன் பொது வாக்கெடுப்பு கோருதல் என்ற பிரேரணையை கொடுத்திருந்தேன்.

அந்தப் பிரேரணை இன்றைய கூட்டத்தொடரில் இணைக்கவில்லை. இதனை வன்மையாகக் கண்டிப்பதுடன், இந்தப் பிரேரணையை தற்போதைய நிகழ்ச்சி நிரலில் இணைக்குமாறு சபையில் மாநகர பிரதி முதல்வர் துரைராசா ஈசன் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்டிடம் வேண்டுகோள் விடுத்தார்.

இதன்போது, சபையின் தேவை கருதியும், மக்களின் தேவை கருதியும் சபையில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள முடியுமென உறுப்பினர் ஒருவர் கூறினார்.

இந்தக் காலகட்டத்தில் பிரதி முதல்வரினால் கொண்டுவரப்பட்ட இந்தப் பிரேரணை அவசியமானதென்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தனர்.

அத்துடன், இந்தப் பிரேரணையின் முக்கியத்துவம் சார்ந்து இந்தப் பிரேரணைக்கு வலுச்சேர்க்க தாம் விரும்புவதாகவும் உறுப்பினர் தெரிவித்தார்.

இதன்போது, குறுக்கிட்ட முதல்வர் இந்தப் பிரேரணை சபையில் எடுப்பதில்லை என உறுப்பினர்களுடன் கலந்துரையாடி தீர்மானிக்கப்பட்ட ஒரு விடயம். அதற்கமைவாக இந்தப் பிரேரணையை சபையில் எடுக்கவில்லை. அவ்வாறு தீர்மானம் எடுக்கப்பட்டபோது, பிரேரணை சமர்ப்பித்த பிரதி முதல்வரும் உடனிருந்தார் என்றும் முதல்வர் குறிப்பிட்டார்.

ஏனைய உறுப்பினர்கள் இந்தப் பிரேரணையை சபையில் விவாதிக்க வேண்டாமென கூறினால், அந்தப் பிரேரணையை சபையில் எடுக்கமாட்டீர்களா என பிரதி முதல்வர் ஈசன், முதல்வரிடம் வினவினார்.

இது தனிப்பட்ட பிரேரணை அல்ல. ஒரு பொதுவான பிரேரணை என்பதன் அடிப்படையில், எமது கட்சி அதாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் அனைவரும் கூடி இந்தப் பிரேரணையைக் கொண்டு வருவதில்லை எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தினால், இந்தப் பிரேரணையை எடுக்குமாறு எந்த அறிவித்தலும் கிடைக்கவில்லை. ஆகையினால், இந்த விடயம் தெரிந்த நீங்களும், இந்த சபையில் எடுத்து சர்ச்சைக்குரிய விடயம் ஆக்க வேண்டாமென முதல்வர் சபையில் தெரிவித்தார்.

இதன்போது, 45 உறுப்பினர்களையும் இணைத்து செயற்பட விரும்பினால், நாங்கள் உங்களுடன் இணைந்து செயலாற்ற முடியும் என உறுப்பினர்கள் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.

இவ்வாறு உறுப்பினர்கள் பலர் தமது கருத்துக்களை முன்வைத்த போதிலும், முதல்வர் தனது கொள்கையில் இருந்து மாறவில்லை. இந்தப் பிரேரணை எடுக்காத காரணத்தினால், சபையில் உறுப்பினர்கள் இடையே கருத்து மோதல்களும் இடம்பெற்றன.

காணாமல் போனோருக்கான நீதி கிடைக்க வேண்டுமென, தமிழ் மக்களுக்கான நீதி கிடைக்க வேண்டுமெனவும், அழுத்தம் திருத்தமாக சொல்ல வேண்டிய இடங்களிற்கு சொல்லியிருக்கின்றோம்.

பிரதி முதல்வர் நீங்கள் பிரதி முதல்வராக செயற்படவில்லை கடுமையான விமர்சனங்களை முன்வைத்ததுடன், நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி எதுவென்றும் முதல்வர் கேள்வி எழுப்பினார்.

இதன்போது, ரெலோ கட்சிசார்ந்த பிரதி முதல்வருக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் மாநகர உறுப்பினர்களுக்கும் இடையில் கருத்து மோதல்கள் இடம்பெற்றன.

தேசிய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நீங்கள் எந்த கஷ்டத்தையும் எதிர்கொள்ளவில்லை. எதிர்கொண்டால் தான் அந்த வேதனை புரியுமென பிரதி முதல்வர் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இவ்வாறு வாக்குவாதங்கள் வலுப்பெற்ற நிலையில், ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தொடரில் வலுச்சேர்க்கும் முகமாக யாழ். மாநகர சபையில் இருந்து கால அவகாசம் கொடுப்பதை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென கோரினார்.

கால அவகாசம் கொடுப்பதை ஏற்றுக்கொள்ளமாட்டேன். அது எமது நிலைப்பாடு அல்ல என்றார். குறிக்கிட்ட பிரதி முதல்வர் நீங்கள் அரசாங்கத்தை ஆதரிக்கின்றீர்களா என முதல்வரிடம் கேள்வி எழுப்பினார்.

புதிலளித்த முதல்வர், இந்த சபையில், கத்தி, உணர்வாளர் என காட்டி அனைத்தையும் சாதிக்க முடியுமென நினைக்க வேண்டும். எமக்கும் எல்லாம் தெரியும். அனைத்து விடயங்களும் தெரிந்த பின்னரும் சபையில் அநாகரீகமாக நடந்துகொள்வதாக சபையில் அதிருப்தி வெளியிட்டார்.

இது உரிமை மீறல், தற்போது, எனது பிரேரணையை நிகழ்ச்சி நிரலில் இணைக்குமாறு பிரதி முதல்வர் முதல்வரிடம் கோரிய போதும், உறுப்பினர்கள் வாக்கெடுப்பிற்கு எடுக்குமாறு கோரியிருந்தனர்.

அதனை ஏற்க மறுத்த முதல்வர் வாக்கெடுப்பு நடாத்த முடியாது. இலங்கைக்கு கால அவகாசம் கொடுக்கக்கூடாது என்ற விடயம் தொடர்பான பிரேரணை சபையில் விவாத்திற்கு எடுக்கமாட்டேன் என உறுதியாக தெரிவித்ததுடன், அடுத்த பிரேரணை தொடர்பான விவாதத்தை முன்னெடுத்தார்.

இருந்தும், பிரேரணை தொடர்பாக எந்தவித தீர்மானங்களும் எடுக்கப்படாமல் சபையில் கூச்சல் குழப்பங்களுடன் சபை அமர்வு இடம்பெற்றது.

Latest Offers