ஜெனிவா யோசனையில் இருந்து விலக வேண்டும்: உதய கம்மன்பில

Report Print Steephen Steephen in அரசியல்

இலங்கை சம்பந்தமாக ஜெனிவா மனித உரிமை பேரவையில் சமர்பிக்கப்பட்டுள்ள கூட்டு யோசனைக்கு உதவுவதில் இருந்து இலங்கை அரசு விலக வேண்டும் என பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

பிரித்தானியா, கனடா, ஜேர்மனி, மொண்டினீக்ரோ, வடக்கு மெசிடோனியா, வட அயர்லாந்து ஆகிய நாடுகளின் அனுசரணையுடன் நேற்று ஜெனிவாவில் இலங்கை சம்பந்தமான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

தற்போதைய மனித உரிமை ஆணையாளர் தனது அறிக்கையில் ஊடாக இலங்கை இணை அனுசரணை வழங்கிய, முன்னாள் ஆணையாளர் வெளியிட்ட அறிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, யோசனை மற்றும் இணை அனுசரணையில் இருந்து விலக வேண்டும்.

இம்முறை மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது விசேட பிரதிநிதிகள் மூன்று பேரை அனுப்பி வைப்பது பாராட்ட வேண்டிய நடவடிக்கை எனவும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers