பொறுப்புணர்வுடன் செயற்படுங்கள்! மகிந்த தரப்பு அறிவுரை

Report Print Kamel Kamel in அரசியல்
89Shares

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர பொறுப்புணர்ச்சியுடன் செயற்பட வேண்டுமென ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்சன யாப்பா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்...

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் என்ற வகையில் தயாசிறி ஜயசேகர பொறுமையுடன் செயற்பட வேண்டும்.

இரண்டு தரப்பினையும் ஒன்றிணைக்கும் முயற்சியின் போது அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியமானது. அச்சுறுத்தல்களை விடுப்பதன் மூலம் எதனையும் சாதித்துவிட முடியாது.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் ஒப்பீடு செய்யும் போது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு பெரியளவில் வாக்குப் பலம் கிடையாது என அனுர பிரியதர்சன யாபா தெரிவித்துள்ளார்.