புதுமணத் தம்பதிகளுக்கு கிடைக்கும் அதிர்ஷ்டம்! முதலில் நிதியமைச்சர் மங்களவிற்கு

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்
427Shares

இலங்கை வரலாற்றில் புதுமணத் தம்பதிகளுக்காக அறிமுகப்படுத்திய திட்டத்தின் முதல் பயனை நிதியமைச்சர் மங்கள சமரவீர அடைய வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசையென நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபே குணவர்தன தெரிவித்துள்ளார்.

நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் கடந்த 5ஆம் திகதி முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பிற்கான வாக்கெடுப்பு இன்று மாலை நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது.

இந்த வாக்கெடுப்புக்கு முன்னர் விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய அவர்,

புதுமணத் தம்பதிகளுக்கான 'ஹோம் சுவீட் ஹோம்' திட்டத்தை அறிமுகப்படுத்திய நிதியமைச்சர் மங்கள சமரவீர, அத் திட்டத்தின் பலனை அடையவேண்டும் என்பதே எனது ஆசை. அந்தப் பலனை அவர் அடைய வேண்டும் என்றார்.

எவ்வாறாயினும் மங்கள சமரவீர அமர்த்திருந்த இந்த வரவு செலவுத்திட்டத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தன்னுடைய ஆதரவினை வழங்கி வெற்றியடையச் செய்திருக்கிறது. இதன் மூலமாக 119 ஆதரவினால் வரவுசெலவுத்திட்டம் வெற்றியடைந்தமை குறிப்பிடத்தக்கது.