மத்திய வங்கியின் ஆளுநருக்கு சவால் விடுத்த தினேஷ் குணவர்தன

Report Print Steephen Steephen in அரசியல்

2019 ஆம் ஆண்டு எவ்வளவு தொகை பணம் அச்சிடப்பட்டது என முடிந்தால், வெளியிடுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன, மத்திய வங்கியின் ஆளுநருக்கு சவால் விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அரச அச்சகக் கூட்டுத்தாபனம் பணத்தை அச்சிட்டு வருகிறது எனவும் முடிந்தால், இந்த ஆண்டு எவ்வளவு தொகை பணம் அச்சிடப்பட்டது என்பதை மத்திய வங்கியின் ஆளுநர் வெளியிட வேண்டும் சவால் விடுப்பதாகவும் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers