நாட்டின் சுயாதீனத்தன்மை மலினப்பட்டுள்ளது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் பிழையான செயற்பாடுகளினால் நாட்டின் சகல பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு அமெரிக்காவும் ஐரோப்பாவும் தலையீடு செய்கின்றன என தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் நாட்டு மக்களின் தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வெளிநாடுகளின் தேவைக்கு ஏற்ற வகையிலேயே அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது என அவர் கொழும்பு ஊடகங்களிடம் இன்று தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளின் நூல் பாவை போன்றதொரு அரசாங்கம் நாட்டுக்குத் தேவையில்லை எனவும், மக்களும் இதனை புரிந்து கொள்ள வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.