ஐ.தே.க திடீர் குத்துக்கரணம்! மைத்திரிக்கு ஆதரவளிக்க தீர்மானம்

Report Print Murali Murali in அரசியல்
615Shares

நாளை இடம்பெறவுள்ள ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கத்திற்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

அந்த கட்சியின் தவிசாளரும், அமைச்சருமான கபீர் ஹாசிம் இதனை தெரிவித்துள்ளார்.

2019ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டம், நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால், நாடாளுமன்றத்தில் கடந்த ஐந்தாம் திகதி சமர்ப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், வரவு செலவு திட்டத்தில் ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீட்டை தோற்கடிக்க போவதாக ஐக்கிய தேசிய கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்திருந்தனர்.

இதனால் கொழும்பு அரசியல் களம் பரபரப்படைந்திருந்தது. இந்நிலையில், நாளை இடம்பெறவுள்ள ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கத்திற்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் தெரிவித்துள்ளார்.