கொழும்பு வாழ் தமிழ் மக்களை இலக்கு வைத்து பொலிஸார் மேற்கொண்ட விபரங்களை பதிவு செய்யும் நடவடிக்கைகளை உடன் நிறுத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் வெளியிட்டுள்ளார்.
இது குறித்து தான் விடுத்த கோரிக்கையினை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்றிடம் பேசிய அமைச்சர் மனோ கணேசன்,
“கொழும்பில் வசிக்கின்ற தமிழ் மக்களை இலக்கு வைத்து பொலிஸார் பல இடங்களில் பதிவு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். இது தமிழ் மக்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தியிருந்தது.
யுத்தகாலத்தில் இது தேவையாக இருந்தப்போதும், தற்போது அநாவசிமான விடயம் என்ற நிலையில் அதனை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தான் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தேன்.
இந்நிலையில், தனது கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, அதனை உடனடியாக நிறுத்துவதற்கு உத்தரவிட ஜனாதிபதி இணக்கம் வெளியிட்டுள்ளதாக” அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.