தலவாக்கலை - லிந்துலை நகரசபையின் தவிசாளர் அசோக்க சேபால உத்தியோக பூர்வமாக ஐ.தே.க. உறுப்பினராக இணைந்து கொண்டுள்ளார்.
தலவாக்கலை - லிந்துல நகரசபையின் தவிசாளர் அசோக்க சேபால இன்று நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும், பிரதமருமான ரணில் விக்ரசிங்கவை சந்தித்து ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினராக இணைந்து கொண்டுள்ளார்.
கடந்த காலங்களில் ஸ்ரீலங்கா பெரமுன கட்சியோடு இணைந்து செயல்பட்டு வந்தாலும், கட்சியில் அங்கிகாரம் கிடைக்காததன் காரணத்தினால் சில மாதங்களாக சுயாதீனமாக செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.