எமது தரப்பிலிருந்து தான் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவார்! மகிந்த உறுதி

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

வரவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியைச் சேர்ந்த வேட்பாளரே எமது தரப்பில் நிறுத்தப்படுவார் என்று, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எம்பிலிப்பிட்டியவில், செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதில் வழங்கிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

எமது தரப்பில் போட்டியில் நிறுத்தப்படும் ஜனாதிபதி வேட்பாளர், நிச்சயமாக, ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் கீழ் தான் போட்டியிட வேண்டும்.

மேலும், நிறைவேற்று அதிகார அதிபர் ஆட்சிமுறை நீக்கப்பட வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என்றார்.

Latest Offers