புத்தளம் அறுவைக்காட்டு குப்பை பிரச்சினை தொடர்பில் நாடாளுமன்றத்தில் விசேட கலந்துரையாடல்!

Report Print Mubarak in அரசியல்

புத்தளம் - அறுவைக்காட்டு குப்பை பிரச்சினை தொடர்பில் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌசி தலைமையில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் , முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கிடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடல் நாடாளுமன்ற கட்டடத்தொகுதியின் குழு அறையில் இன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் சர்வமத தலைவர்கள் உள்ளடங்கிய புத்தளம் கிளீன் அமைப்பினர் புத்தளம் மக்களின் சார்பாக கலந்து கொண்டு, இதனால் புத்தளத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தெளிவுபடுத்தியுள்ளனர்.

இதன்போது இது தொடர்பில் பிரதமருடன் விரைவில் ஒரு சந்திப்பை ஏற்படுத்தி பாதிப்பின் உண்மை நிலையை விளக்குவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த கூட்டத்தில் சர்வமத தலைவர்களான குசல தம்ப தேரர் , சுந்தர் ராம குருக்கள், அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் உட்பட புத்தளம் கிளீன் (Puttalam Clean) அமைப்பினர், இராஜாங்க அமைச்சர்களான அமீர் அலி , அலிசாஹிர் மௌலானா, பாலித ரங்கே பண்டார மற்றும் பிரதி அமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் நாடாளுமன்ற உறுப்பினர்களான நசீர் , மன்சூர் , முஜீபுர் ரஹ்மான், இம்ரான் மஹ்ரூப், தௌபீக், ஹெக்டர் அப்புஹாமி, மஸ்தான், அருந்திக்க பெர்னாண்டோ, மரைக்கார், சனத் நிசாந்த, ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.