வரவு செலவு திட்ட வெற்றியின் பின்னிருக்கும் சம்பந்தன் - ரணிலின் அவசர சந்திப்பு!

Report Print Murali Murali in அரசியல்
335Shares

ஐக்கிய தேசியக் கட்சிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் இன்று அவசர சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாக தவல்கள் வெளியாகியுள்ளன.

வரவு செலவு திட்ட வாக்கெடுப்பிற்கு முன்னர் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக கொழும்பு அரசியலில் இருந்து அறிய முடிகின்றது.

2019ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டம், நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால், நாடாளுமன்றத்தில் கடந்த ஐந்தாம் திகதி சமர்ப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், வரவு செலவு திட்டத்தின் இரண்டாவது வாசிப்பின் மீது வாக்கெடுப்பு இன்று நடத்தப்பட்ட நிலையில், அது 43 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையிலேயே, குறித்த சந்திப்பு வாக்கெடுப்பிற்கு முன்னர் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு - கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வு காணாவிட்டால், வரவுசெலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களிப்போம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிவித்திருந்தது.

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை. சேனாதிராசா நேற்று இவ்வாறு எச்சரித்து பேசியிருந்தார்.

இந்த நிலையிலேயே, கூட்டமைப்பின் ஆதரவை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக அறியமுடிகின்றது.

எவ்வாறாயினும், இது குறித்து உறுதியான தகவல்கள் எவையும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.