அமைச்சரவை கூட்டத்திற்கு செல்லும் அமைச்சர்கள் கையடக்க தொலைபேசிகளை கொண்டு செல்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதியினால் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பல அமைச்சர்கள் அமைச்சரவை கூட்டத்தின் போது கையடக்க தொலைபேசிகளில் அழைப்பு மேற்கொண்டதுடன், அழைப்புகளுக்கு பதில் வழங்கியமையினால் ஜனாதிபதியினால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மேற்கொண்டுள்ள இந்த தீர்மானத்திற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் அனுமதி வழங்கியுள்ளளதாக குறிப்பிடப்படுகின்றது.