வரவு செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பு! குற்றம் சுமத்தும் வாசுதேவ

Report Print Jeslin Jeslin in அரசியல்
63Shares

அரசாங்கம் நாடாளுமன்றத்திலுள்ள சில எம்.பிக்களுக்கு பரிசுப் பொருட்களை கொடுத்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாகவே வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்குகள் கிடைக்கப்பெற்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் கட்ட வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் 43 மேலதிக வாக்குகளினால் அரசாங்கம் வெற்றி பெற்றுள்ளமை தொடர்பில் தனியார் ஊடகம் ஒன்றிடம் தெரிவிக்கும்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.