அரசியலமைப்பினை கடலை சுற்றும் கடதாசியாக பயன்படுத்தும் ஜனாதிபதி

Report Print Gokulan Gokulan in அரசியல்
49Shares

அரசியலமைப்பினை ஜனாதிபதி கடலை சுற்றும் கடதாசியாக பயன்படுத்தி வருகின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் தற்பொழுது இடம்பெற்று வருகின்ற குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில்,

அரசியலமைப்பை மீறி ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைத்தார். எனினும் அரசியலமைப்பை மீறி நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஜனாதிபதி தொடர்ந்தும் அரசியலமைப்பை மீறும் வகையில் செயற்பட்டு வருகின்றமையை ஏற்று கொள்ள முடியாது. அதனை எம்மால் வேடிக்கை பார்க்கவும் முடியாது என தெரிவித்துள்ளார்.