அரசாங்கத்தை கவிழ்க்கவும், வரவு - செலவுத் திட்டத்தை தோற்கடிக்கவும், புதிய அரசாங்கத்தை அமைக்கவும் வேண்டுமாயின் மகிந்த தரப்பினர் தன்னிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சத்துர சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
வேறு கனவு உலகில் இருக்கும் அரசியல் அணிகள் இதனை தன்னிடம் கற்றுக் கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வரவு - செலவுத் திட்டத்தின் மீதான வாக்கெடுப்பின் பின் நேற்று நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட போதே சத்துர சேனாரத்ன இதனை கூறியுள்ளார்.
வரவு - செலவுத் திட்டத்தை தோற்கடித்து ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தை கவிழ்க்க மகிந்த தரப்பினர் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தமை குறித்து கேட்கும் போதே சத்துர சேனாரத்ன இதனை தெரிவித்துள்ளார்.