நீண்ட காலம் செல்லும் முன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சக்கு இடையிலான திருமணம் விவாகரத்தில் முடிவடையும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருணா தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் தமது வேட்பாளரை நிறுத்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முயற்சித்து வரும் நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை மீண்டும் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த முயற்சித்து வருகின்றனர்.
இதனால், மகிந்த மற்றும் மைத்திரி தரப்பினருக்குள் மோதல் அதிகரித்துள்ளதாகவும் ஹர்சன ராஜகருண குறிப்பிட்டுள்ளார்.