இந்தியாவில் பணிப்புரியும் இலங்கை ஊழியர்களுக்கு கிடைக்க போகும் வாய்ப்பு

Report Print Steephen Steephen in அரசியல்
131Shares

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் இருத்தரப்பு சமூக பாதுகாப்பு உடன்படிக்கையை கைச்சாத்திட தேவையான சட்டத்திருத்தத்தை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கையில் அமுலில் உள்ள தொழில் சட்டத்திற்கு அமைய இலங்கையில் தொழில் புரியும் ஊழியர்கள் 1958 இலக்கம் 15 ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பான சட்டத்தின் மூலம் பாதுகாக்கப்படுகின்றனர்.

இந்த ஊழியர்கள் இலங்கையில் சேவை காலம் முடிந்து நாடு திரும்பும் போது, ஊழியர் சேமலாப நிதியத்திற்கு செலுத்திய முழு பணத்தையும் அதற்கான வட்டியையும் பெற்றுக்கொள்ள முடியும்.

எனினும் இந்தியாவில் அமுலில் உள்ள சட்டத்திற்கு அமைய அங்கு பணியாற்றும் இலங்கை ஊழியர்களுக்கு அந்நாட்டில் சமூக பாதுகாப்பு முறைக்கு பங்களிப்பு வழங்க வேண்டும். அங்கு பணிப்புரியும் இலங்கை ஊழியர்கள் 58 வயது முடியும் வரை ஊழியர் சேமலாப நிதியை திரும்ப பெற முடியாது.

இந்த பிரச்சினையை தீர்க்கும் வகையில் இந்தியாவில் பணிப்புரியும் இலங்கை ஊழியர்களுக்கு சலுகையை பெற்றுக்கொடுப்பதற்காகவும் இல்ஙகைக்கும் இந்தியாவுக்கும் இடையில் இந்த சமூக பாதுகாப்பு உடன்படிக்கை செய்துக்கொள்ள வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த உடன்படிக்கை மூலம் இலங்கை ஊழியர்கள் தமது சேவை காலம் முடிந்து திரும்பும் போது ஊழியர் சேமலாப நிதியையும் வட்டியையும் திரும்ப பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.