ஜனாதிபதி செயலகத்தில் தீட்டப்பட்ட ஒக்டோபர் சதி!

Report Print Steephen Steephen in அரசியல்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நீக்கி விட்டு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்து மேற்கொண்ட அரசியல் சதித்திட்டம் ஜனாதிபதி செயலகத்திலேயே தீட்டப்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதி மேற்கொண்ட அரசியல் சதித்திட்டம் காரணமாக ஜனாதிபதி செயலகத்திற்கான நிதி ஒதுக்கீட்டை தோற்கடிக்க வேண்டும் என்ற யோசனையை முன்வைக்கின்றேன்.

ஜனாதிபதி கூறுவதை எவரும் கேட்பதில்லை என்றால், ஜனாதிபதித் தேர்தல் ஒன்றுக்கு செல்ல வேண்டும் எனவும் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers