திலக் மாரப்பனவும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் ஜெனிவா விஜயம்

Report Print Ajith Ajith in அரசியல்

ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் குழு ஜெனிவா மனித உரிமைகள் பேரவை அமர்வில் பங்கேற்க விரைவில் செல்லவுள்ளது.

வெளியுறவுத்துறை அமைச்சர் திலக் மாரப்பனவின் தலைமையில் எதிர்க்கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான சரத் அமுனுகம, வடக்கின் ஆளுநர் சுரேன் ராகவன், வெளியுறவு செயலாளர் ரவிநாத ஆரியசிங்ஹ, உதவி மன்றாடியார் நாயகம் ஏ நெரின் புள்ளே ஆகியோர் இதில் அடங்குகின்றனர்.

இவர்கள் ஜெனிவாவில் உள்ள வதிவிடப்பிரதிநிதி ஏஎல்ஏ அஸிஸ் உள்ளிட்ட குழுவினருடன் இணைந்து கொள்ளவுள்ளனர்.

ஜெனிவாவில் எதிர்வரும் 20ஆம் திகதியன்று இலங்கை தொடர்பான யோசனை விவாதிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.