சுதந்திரக்கட்சியும் பொதுஜன பெரமுனவும் சந்திக்கின்றன

Report Print Ajith Ajith in அரசியல்
79Shares

இணைந்து செயற்படுவது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் இந்த வாரத்தில் பேச்சுக்களை ஆரம்பிக்கவுள்ளன.

இது நாளை ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் இலக்காக புதிய கூட்டணி உருவாக்கப்படவுள்ளது.

பேச்சுவார்த்தை திறந்த மனதுடன் இடம்பெறும் என்று பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஏற்கனவே மைத்ரிபாலவும் மஹிந்தவும் உத்தியோகபற்றற்ற வகையில் சந்திப்பை நடத்தியிருந்தனர்.

இந்தநிலையில் மஹிந்த ராஜபக்சவே அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக இருப்பார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை 19வது திருத்தத்தின்கீழ் மஹிந்தவுக்கு மூன்றாவது முறையாக ஜனாதிபதியாக போட்டியிடமுடியாது. இந்தநிலையில் அவரின் பரிந்துரையில் ஒருவர் போட்டியிடுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.