ஐக்கிய தேசிய முன்னணி 2015ஆம் வெற்றி பெற செய்த மைத்திரி சிந்தனை தற்போது எமக்கு பின்னர் இருந்து கொண்டு கத்தியால் முதுகில் குத்துவதாகவும் அப்படியான ஒருவருக்கான நிதி ஒதுக்கீடுக்கு தன்னால் வாக்களிக்க முடியாது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத்திட்டம் மீதான குழு நிலை விவாதத்தில் இன்று கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அரசியல் நெருக்கடி ஒன்று உருவாகியுள்ளது. ஒரு நபர் அரசாங்கத்தின் மீது தலையீடுகளை மேற்கொள்கிறார்.
சிறந்த வேலைகளை செய்யும் போது ஜனாதிபதி அதற்கு தடையேற்படுகிறார். எனக்கு ஜனாதிபதியுடன் தனிப்பட்ட கோபங்கள் எதுவுமில்லை.தனிப்பட்ட ரீதியில் பழிவாங்கும் நடவடிக்கையாக எனக்கு வழங்கப்பட வேண்டிய அமைச்சு பதவியை வழங்காமல் இருப்பதாகவும் எனவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
சரத் பொன்சேகா மற்றும் ஹிருணிகா பிரேமச்சந்திர ஆகியோர் ஜனாதிபதி கடுமையாக விமர்சித்து உரையாற்றியிருந்தனர்.