தேர்தலுக்கு முன்னர் வாக்காளர்களை கவர்வதற்கான முயற்சி: அங்கஜன்

Report Print Vamathevan in அரசியல்
168Shares

இந்த 2019 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டம் ஒரு சவால் விடுக்கும் அதி உச்ச பணியாகவும், தேர்தலுக்கு முன்னர் வாக்காளர்களை கவர்வதற்கான முயற்சியாகவும் காணப்படுகின்றது என அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு வரவு செலவு திட்ட முன்மொழிவுகள் குறித்து இன்று நாடாளுமன்ற உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன் போது தொடர்ந்தும் பேசிய அவர்,

அரசாங்கத்தின் மூலோபாயமானது நிஜமற்ற, அதிகரித்த செலவீனத்தை ஏற்படுத்தி வரவு செலவுத்திட்டத்தில் 4.4 சதவீத பற்றாக்குறையை ஏற்படுத்த முயற்சிக்கின்றது.

தூர நோக்குகளை கொண்ட வரவு செலவு திட்டமாயினும் இந்த அரசாங்கத்தின் கடந்த சில வரவு செலவு திட்டங்களை திருப்தியற்ற முறையில் நடைமுறைப்படுத்தி வந்த வரலாற்று அனுபவங்களை கொண்டு தூர நோக்கினை கொண்டிராத அரசியல் இலக்குடன் கூடிய புதிய முன்மொழிவுகளையே கருத்தில் எடுத்து கொள்ள விரும்புகின்றேன்.

அவ்வாறே இந் நடவடிக்கைகளும் எம்மை நம்பிக்கையீனமாக்குகின்றது. 2018 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் 4.8 சதவீதம் என எதிர்வு கூறப்பட்ட வரவு செலவு திட்ட பற்றாக்குறை இறுதியில் 5.3 சதவீதத்திற்கு சென்றது. என்பதை இவ் உயரிய சபையிலே பதிவு செய்து கொள்கின்றேன்.

அரசாங்கம் வருடா வருடம் உயர் வரிவிதிப்பினை நடைமுறைப்படுத்தி வந்தாலும் அரசாங்கத்தின் அதிகரித்த செலவீனத்தை சுமப்பதற்கு மக்கள் துன்பப்படுகிறார்கள். கறுப்பு சந்தையை இல்லாதொழிப்பதற்கான சட்டங்களை நடைமுறைப்படுத்த தவறியமையும், வருமானத்தேய்வுகளை சரிசெய்வதற்கு தவறியமையும் நாட்டின் வளர்ச்சியை 17 வருடங்களுக்கு பின்னோக்கி நகர்த்தியுள்ளது.

விவசாயம் மற்றும் மீன்பிடி தொழில் போன்ற முக்கிய சமூக பொருளாதார துறைகளுக்கு குறைந்தளவிலேயே முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் பெரும்பாலான மக்கள் கிராமங்களில் இத்தகைய வாழ்வாதாரங்களில் தங்கியுள்ளமையினால் இவையே முக்கிய வருமான ஈட்டங்களின் பிரதான வழிமுறையாகவும் காணப்படுகின்றது.

விசேடமாக சுற்றுலாத்துறை போன்ற மூன்றாம் நிலைத்துறைகள் 50 சத வீதத்தினையே பங்களிப்பு செய்கிறது. மிக குறைந்த அரசாங்க உதவிகளுடன் செயற்பட்டு வருகின்ற மேற்படி முறை சாராத துறைகள் இணையத்தள உதவியுடன் பாரிய வளர்ச்சியடைந்து நாட்டிற்கு வருமானத்தை ஈட்டி தருகின்றன.

கைத்தொழில் துறையில் ஒரு சிறு சாராருக்கு நன்மை பயக்கும் ஊக்குவிப்பு வழங்குவதை விடுத்து, சுற்றுலா துறையின் நீண்டகால அபிவிருத்திக்கு அர்த்தமான பேண்தகு முன்மொழிவுகளை அரசாங்கம் முன்னிறுத்தவில்லை.

இந்த முன்மொழிவுகளின் நோக்கம் என்ன தொழிற்துறை சார்ந்தோர் இவ்வினாவை விடுக்கிறார்கள் என நிச்சயமாக நம்புகிறேன்.இந்த முன்மொழிவுகளால் ஏற்படுத்தப்படும் மேலதிக நிர்வாக செயற்பாடுகள் நுண் மற்றும் சிறு முயற்சியாண்மையாளர்களை சோம்பலடைய செய்வதோடு, வீட்டில் நடுத்தர அளவுகளில் சுயதொழிலாக மேற்கொள்பவர்களின் வளங்களில் வரி சுமைகளை ஏற்படுத்துகின்றது.

பிரதமரின் முன்மொழிவுகளை நோக்கும் போது முறைசாரா சுற்றுலா துறையை சரியாக்கும் எத்தனிப்பிலேயே குறியாக இந்த அரசாங்கம் செயற்படுவதாக எனக்கு தோன்றுகின்றது. இந்த துறைகளை அரசாங்கத்தின் முயற்சிகளின்றி இணையம் பதிவு செய்யும் தளங்கள் மற்றும் முயற்சியாண்மை சிந்தனையுடைய மக்களினாலே வளர்ச்சியடைந்துள்ளது.

இலங்கையர் ஒருவர் தனது வீட்டிலிருந்தவாறே இணையத்தின் ஊடாக வெளிநாட்டவருக்கு அறையை பதிவு செய்து பணம் பெறும் தகுதியிருப்பின், அவரை இணையம் ஊடான சிறு வர்த்தகத்தை ஆரம்பித்து அதனூடாக நிர்வாக பணிகளை மேற்கொள்வதன் ஊடாக வர்த்தகத்தை எம்மால் சுலபப்படுத்த எங்களால் முடியாதா? அதற்காக உயரிய சபையிலே நான் முன்மொழிவது நுண் மற்றும் சிறு தொழில் முயற்சியாண்மையாளர்களுக்கு வளங்கள் , மற்றும் அறிவுடன் கூடிய வலைப்பின்னல்களை அவர்களின் வளர்சிக்காக வழங்குவதன் மூலம்,அவர்களின் சிறந்த பங்களிப்பினை நாட்டின் அபிவிருத்திக்கு வழங்க செய்வதாக அமையும் என்பதேயாகும்.

உலகளாவிய ரீதியில் தொழில் நுட்பம் மற்றும் இணைய அடிப்படையிலான வர்த்தக முறைமைகள், கோடிக்கணக்கான வர்த்தக மற்றும் புதிய வேளை வாய்ப்புக்களையும் ஏற்படுத்தி வருகின்றன. எங்கள் அமைவிடம் வர்த்தகத்திற்கு அருகதையற்றதாக மாறி வரும் கால கட்டத்தில் வாழ்ந்து வருகின்றோம்.

இது நான்காவது கைத்தொழில் புரட்சியின் ஒரு அங்கமாகும் என நான் நம்புகின்றேன். பழைய வர்த்தக முறைகளும், கைத்தொழில்களும் அருகி வரும் நிலையில்,உயர் தர நவீன வர்த்தக முறைமைகளுக்கு மாறிவரும் காலகட்டத்தில் வாழ்ந்து வருகிறோம்.

ஆனால் நான் நினைக்கின்றேன் உலகினை மாற்றி வரும் உயர்தர நவீன வர்த்தக முறைகளையும் பொருளாதார நிலையினையும் அடையாளப்படுத்துவதற்கு நிதி அமைச்சர் தவறிவிட்டார்.

இன்றும் தொழில் நுட்பம் இல்லாது ஒரு வர்த்தகத்தை கொண்டு செல்ல முடியாது. சுயமாக கோடீஸ்வரர்களாகியவர்களையும், தொழில் முயற்சியாளர்கள், தொழில் நுட்ப வர்த்தகர்களையும் இந்த உலகம் ஏற்ப்படுத்தியுள்ளது. ஆனால் இந்த வரவு செலவு திட்டத்தில் இத்தகைய குறிப்பிடத்தக்க சந்தர்ப்பத்திற்கு வழங்கப்பட்ட முன்மொழிவுகள் எதனையும் காணவில்லை.

ஒரு நாடு மிக உயர்ந்த மொழி தேர்ச்சி வீதத்தையும் பலமான தகவல் தொழில் நுட்பவியலாளர்களையும் கொண்ட பல்வேறான பல்தேசிய கம்பனிகளுக்கு சேவை வழங்கி வருகின்றதாயின், தொழில் நுட்ப கம்பனிகளை தொழில் முயற்சியாண்மையாளர்களாக தகுதி உடையோரை ஊக்கப்படுத்துவதற்கான எந்த முன்மொழிவுகளும் இங்கே ஏன் காணப்படவில்லை. இதை ஆரம்பிப்பதற்கு நிதியும், கண்காணிப்பும் தேவை ஆனால் கடன் தேவைப்படாது.

இந்தியாவின் பெங்களூர், கர்நாடகாவில் தொழில் ஆரம்பிக்க கொள்கை ஆவணத்தின் படி அண்ணளவாக இதிலிருந்து வரையான பாரிய தொழில்களையும் ஏற்ப்படுத்தி இரண்டாவது உயர்ந்த வளர்ச்சியை அடைந்துள்ளது. இதனை உற்று நோக்கும் போது நாம் எங்கே நிற்கின்றோம்.

எமது திட்டம் தான் யாது எமது அயல் நாட்டவர்களும் ஏனையவர்களும் பில்லியன் கணக்கிலான டொலர்களை இத்தகைய புத்தாக்க நடவடிக்கைகளுக்கு வாரி வழங்கிக் கொண்டிருக்கையில் ரூபா ஐம்பது மில்லியன் தொகையினை ஒதுக்குவது கேள்விக்குரியதொன்றாகும்.

கிராமிய பொருளாதாரத்தையும், வாழ்வாதாரத்தையும் மேம்படுத்துவதற்கு ஒரு குறிப்பிடத்தக்க வாய்ப்பாகும். துரதிஷ்டவசமாக எனது எண்ணப்படி செயற்பாடு கட்டமைப்பு, அரசியல் நோக்கம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான வெளிப்படை தன்மை காணப்படவில்லை.

பொருத்தமான கருத்திட்டங்களை தெரிவு செய்வதற்கும் பொறுப்பு கூறலுக்கும், வெளிப்படை தன்மைக்குமான கட்டமைப்பு காணப்படவில்லை.

இந்த நிகழ்ச்சி திட்டத்தின் குறிக்கோள் கிராமிய அபிவிருத்தியாயின் அரசியல் சார்பற்றதாக காணப்படுவதோடு மக்களின் தேவை அடிப்படையிலான கருத்திட்டங்களுக்கு நிதி வழங்கப்பட வேண்டுமே தவிர அரசியல் சார் அதிகாரிகளுக்கல்ல.

எனது அபிப்பிராயத்தின் படி இந்த செயற்பாடு கிராம மற்றும் தேர்தல் தொகுதி மட்டங்களில் பிரிவுகளை ஏற்படுத்துவதோடு இறுதியில் நாட்டிற்கும் இது பிரதிபலனை கொடுக்கும்.

தேர்தல் தொகுதியின் தேவைகளுக்கும் நிகழ்ச்சி திட்ட தூரநோக்கு சம்பந்தப்பட்ட முன் மொழிவுகளின் தராதரத்திற்கு ஏற்பவும் நிகழ்ச்சி திட்ட தேர்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.என்பதையும் சபையிலே முன்மொழிகின்றேன். எனினும் தேசத்தின் பரந்த துரித அபிவிருத்திக்காக ஏற்படுத்தப்பட்ட நிகழ்ச்சி திட்ட நகர்வுகள் குறுகிய கால நலனுக்காக அரசியல் மயப்படுத்த கூடாது.

காலத்தின் அவசியத்தை கருத்தில் கொண்டு எனது உரையினை முடித்துகொள்வதோடு வரும் நாட்களில் அமைச்சு விவாதங்களிலும் இவற்றை தொடர்வேன் என கூறிகொள்கிறேன்.எனவும் தெரிவித்துள்ளார்.