அரசாங்கத்தின் அனுசரணையுடன் மீண்டுமொரு பிரேரணை: சம்பிக்க அதிருப்தி

Report Print Kanmani in அரசியல்
119Shares

மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தில் இலங்கை தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு அனுசரணை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறித்து, அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

பத்தரமுல்லை - சுஹுருபாயவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்களின் சந்திப்பின் போதே இதனைக் கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

நாட்டின் மறுசீரமைப்பு, பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் என்பவற்றின் விரிவாக்கலை மையப்படுத்தி, பிரித்தானியா, ஜேர்மன் உள்ளிட்ட 5 நாடுகள் இந்த பிரேரணையை முன்வைத்துள்ளன.

2015 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைகளின் படி, இலங்கை அரசாங்கம் அமுலாக்குவதாக ஒப்புக் கொண்ட விடயங்களை நடைமுறைப்படத்த வேண்டும் என்று இந்த பிரேரணையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதேநேரம், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் கலந்துக் கொள்வதற்காக வெளிவிவகார அமைச்சர் திலக் மாரபனவின் தலைமையில் 5 பேர் கொண்ட குழு ஜெனிவா நோக்கி பயணமாகவுள்ளது.

இந்த குழுவில் வெளிவகார அமைச்சர் திலக் மாரபன, வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன், நாடாளுமன்ற உறுப்பினர் சரத் அமுனுகம, வெளிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத ஆரியசிங்க, பிரதி மன்றாடியார்கள் நாயம் ஏ.நெரீன்புள்ளே ஆகியோர் அடங்குகின்றனர்.

எவ்வாறாயினும், கடந்த வாரம் ஊடகப்பிரதானிகளுடன் உரையாடிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தமது சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சரத் அமுனுகம, மகிந்த சமரசிங்க, மற்றும் வடக்கு ஆளுனர் சுரேன் ராகவன் ஆகியோர் ஜெனீவா மாநாட்டில் கலந்துக் கொள்வார் என்று குறிப்பிட்டிருந்தார்.

எனினும் புதிய குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த சமரசிங்க உள்ளடக்கப்படவில்லை.

இதேவேளை, இந்தமுறை ஜெனீவா மாநாட்டில் அரசாங்கத்தின் அனுசரணையுடன் மீண்டும் ஒரு பிரேரணை கொண்டு வரப்படவுள்ளமை தமக்கு அதிருப்தியளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.