மகிந்த எடுக்கும் முடிவே இறுதியானது! பசில்

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்
126Shares

எதிர் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவின் இறுதி முடிவில் தான் யார் ஜனாதிபதி வேட்பாளர் என்பதை தெளிவாக அறிந்துகொள்ள முடியும் என பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளராக யாரை நிறுத்துவீர்கள் என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் வழங்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுபவர் ராஜபக்ஷாக்களில் ஒருவரா? அல்லது வேறு கட்சியைச் சேர்ந்தவர்களா? என்பதை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே தீர்மானிக்க வேண்டும்

தேர்தலில் போட்டியிட விரும்புகின்றவர்கள் தங்களது விருப்பத்தைத் தெரிவித்து விண்ணப்பிக்க வேண்டும். அது எமது எதிரணியிலுள்ள எக்கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரியே. பின்னர் அவருக்கு வெற்றிபெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதா என்பதை ஆராய்ந்து பார்த்து யார் வேட்பாளர் என்பது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என்றார்.

இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் இணைந்து செயற்படுவது தொடர்பில் இந்தவாரம் கூடி ஆராயவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.