மனித உரிமைப் பேரவை தீர்மானம் தொடர்பில் உன்னிப்பாக அவதானிக்க வேண்டும்: மஹிந்த

Report Print Kamel Kamel in அரசியல்

ஐ.நா மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்படும் தீர்மானம் தொடர்பில் உன்னிப்பாக அவதானிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க கோரியுள்ளார்,

எதிர்வரும் 21ஆம் திகதி ஐ.நா மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.

இந்த தீர்மானத்தின் பாதக விளைவுகள் குறித்து உன்னிப்பாக அவதானிக்கப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த தீர்மானத்திற்கு பிரதான அனுசரணை வழங்கும் பிரித்தானியா, கனடா மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.

இந்த மூன்று நாடுகளிலும் அதிகளவில் புலம்பெயர் தமிழ் இலங்கையர்கள் வாழ்ந்து வருகின்றார்கள் என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சமர்ப்பிக்கப்பட உள்ள தீர்மானத்தினை இலங்கை எதிர்க்க வேண்டியதில்லை என்ற போதிலும் பாதக விளைவுகள் குறித்த விடயங்களை திருத்தி அமைத்து கொள்ள குரல் கொடுக்க வேண்டுமென அவர் நேற்று நாடாளுமன்றில் வைத்து தெரிவித்துள்ளார்.

அமுல்படுத்துவதாக உறுதியளித்த விடயங்களை இலங்கை அரசாங்கம் அமுல்படுத்த தவறியமையே இலங்கை இழைத்த மிகப் பெரிய தவறு என மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.