கடும் மன வருத்தத்தில் மஹிந்த!

Report Print Vethu Vethu in அரசியல்

வரவு செலவுத் திட்டத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் வாக்களிக்காமல் வெளியேறியது மிகவும் வருத்தத்திற்குரிய விடயமாகும் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நேற்று திரைப்படம் ஒன்றை பார்க்க சென்ற சந்தர்ப்பத்தில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் மிகவும் ஆபத்தான நிலைமை ஒன்று ஏற்படும். அதனை நாட்டு மக்கள் உணர முடியும்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணைக்குழுவுக்கு பிரித்தானியா சமர்ப்பித்துள்ள யோசனைக்கு இலங்கை இணை அனுசரனை வழங்கினால் அதுவும் இலங்கைக்கு பாரிய ஆபத்தை ஏற்படுத்தும்.

எனவே அதனை விட்டு உடனடியாக விலகியிருப்பதற்கு இலங்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.