ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீட்டை காப்பாற்றிய பிரதமர்

Report Print Steephen Steephen in அரசியல்

ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீடு சம்பந்தமாக நாடாளுமன்றத்தில் நேற்று நடந்த விவாதம் சபையில் சூடான விவாதமாக அமைந்ததுடன் நிதி ஒதுக்கீட்டுக்கு வாக்கெடுப்பு அவசியம் என ஐக்கிய தேசிய முன்னணியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரியிருந்தனர்.

இதனையடுத்து சபாநாயகர் கரு ஜயசூரிய வாக்கெடுப்பு தொடர்பான யோசனையை சபை முதல்வரான அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவின் கவனத்திற்கு கொண்டு வந்த நிலையில் வாக்கெடுப்பு அவசியமில்லை என சபை முதல்வர் குறிப்பிட்டார்.

எனினும் ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், அதற்கு எதிர்ப்பு வெளியிட்டதுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலையிட்டு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.

இதனையடுத்து ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீடு வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.