வெளிநாட்டவர்களுக்கு இலங்கை காணிகளை எழுதிக்கொடுத்த அமெரிக்க பிரஜை

Report Print Steephen Steephen in அரசியல்

கோத்தபாய ராஜபக்ச வெளிநாட்டுப் பிரஜை என்பது நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவுக்கு புரியவில்லை என தேசிய மக்கள் சபையின் ஒருங்கிணைப்பாளர் சமீர பெரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார். மேலும் கூறுகையில்,

பொதுக் கூட்டங்களில் உரையாற்றும் விமல் வீரவங்ச, வெளிநாடு சார்பு கொண்ட அரசாங்கத்தை விரட்ட வேண்டும் என கூறினாலும் நாட்டின் காணிகளை வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்தவர், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முயற்சிக்கும் கோத்தபாய ராஜபக்ச என்பது விமல் வீரவங்சவுக்கு புரியவில்லை.

வரவு செலவுத்திட்டத்தில் தற்போதைய அரசாங்கம் வெளிநாட்டவர்களுக்கு காணிகளை விற்பனை செய்யும் யோசனைகளை முன்வைத்துள்ளதாக விமல வீரவங்ச கூறுகிறார்.

இதனால், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வெளிநாட்டவருக்கு சார்பான இந்த அரசாங்கத்தை விரட்டியடிக்க வேண்டும் என்கிறார்.

கோத்தபாய ராஜபக்சவே வெளிநாட்டவர்களுக்கு காணிகளை சொந்தமான விற்பனை செய்தார். சீனர்கள் என்ன எமது சொந்தகாரர்களா?.

சீனர்களுக்கு காணிகளை விற்பனை செய்தால், சீனர்கள் வெளிநாட்டவர்கள் இல்லையா?. சீனர்கள் விமல் வீரவங்சவின் சொந்தக்கார்களா.

காலிமுகத் திடலில் அமைந்துள்ள செங்ரீலா ஹோட்டலுக்கான காணி சொந்தமாக கொடுக்கப்பட்டது. கோத்தபாய அவற்றை வெளிநாட்டவர்களுக்கு சொந்தமாக எழுதிக்கொடுத்தார்.

கோத்தபாய ராஜபக்ச வெளிநாட்டவர்களுக்கு காணிகளை சொந்தமாக எழுதிக்கொடுத்த அமெரிக்க பிரஜை.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தயாராகி வரும் கோத்தபாய ராஜபக்சவையே நாட்டில் இருந்து முதலில் விரட்ட வேண்டும் எனவும் சமீர பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers