ஜனாதிபதி வேட்பாளர் யார்? இன்று தீர்மானிக்கப்படும்

Report Print Kamel Kamel in அரசியல்

ஜனாதிபதி வேட்பளார் யார் என்பதனை இன்று தீர்மானிக்க உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன ஐக்கிய முன்னணி ஆகியனவற்றின் கூட்டிணைவுடன் உருவாகும் பொது கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது இன்று தீர்மானிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய கூட்டணி ஒன்றை அமைப்பது குறித்து இன்றைய தினம் இரண்டு தரப்பிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்தப் பேச்சுவார்த்தையின் போது யார் ஜனாதிபதி வேட்பாளர் என்பது பற்றி தீர்மானிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொரளையில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.