ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி - ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பேச்சுவார்த்தை வெற்றி

Report Print Steephen Steephen in அரசியல்

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகள் வெற்றியளித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி உள்ளிட்ட பல்வேறு தரப்புக்களை உள்ளடக்கிய ஓர் பாரிய கூட்டணி ஒன்றை உருவாக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதாகவும் மேலும் பேச்சுவார்த்தைகள் தொடரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.