வரவு செலவுத் திட்டம் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை

Report Print Kamel Kamel in அரசியல்

வரவு செலவுத் திட்டம் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத் திட்டம் தொடர்பில் மக்கள் பெரும் எதிர்பார்ப்பை கொண்டிருந்தனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் நேற்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எதிர்கால முதலீடு மற்றும் திட்டங்கள் தொடர்பிலான வருடாந்த முன்மொழிவுகளே வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கும் என்ற போதிலும் இலங்கையின் வரவு செலவுத் திட்டங்களில் அவற்றைக் காண முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.