நாடாளுமன்றத்தில் ரணிலிடம் அடுக்கடுக்காகக் கேட்கப்பட்ட 21 கேள்விகள்

Report Print Steephen Steephen in அரசியல்

வரவு செலவுத் திட்டத்தின் குழு நிலை விவாதத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, தனக்கு ஒதுக்கப்பட்ட முழு நேரத்திலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு 21 கேள்விகளை முன்வைத்தார்.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக அர்ஜூன் மகேந்திரன் நியமிக்கப்பட்டமை, பிரச்சினைக்குரிய பிணை முறி கொடுக்கல் வாங்கல், பிரதமரின் கீழ் நடந்த சில கொடுக்கல் வாங்கல்கள் சம்பந்தமாக வாசுதேவ கேள்விகளை முன்வைத்தார்.

இதற்கு தான் பதிலளிப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இந்த நிலையில், இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலின் அறிக்கையை நாடாளுமன்ற குறிப்பு அறிக்கையில் சேர்க்குமாறு வாசுதேவ நாணயக்கார, சபைக்கு தலைமை தாங்கிய உறுப்பினரிடம் கோரினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராக விசாரணை நடத்தப்படுவதால், அவரது அறிக்கை குறிப்பில் சேர்க்க முடியாது எனக் கூறினார்.