வடக்கு மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு! ரவி கருணாநாயக்க

Report Print Sumi in அரசியல்

வடக்கு மக்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தமிழ் அரசாங்கம் உரிய தீர்வு வழங்கும் என மின்சக்தி வலுவூட்டல் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ரவி கருணாநாயக்க இன்றைய தினம் யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயத்திற்கு விஜயம் மேற்கொண்டு பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டார்.

இதேவேளை, யாழ்ப்பாணம் ஐக்கிய தேசியக் கட்சி அலுவலகத்துக்கு விஜயம் மேற்கொண்டு அங்கு உள்ள ஐக்கிய தேசிய கட்சி ஆதரவுடன் கலந்துரையாடினார். அங்கு கலந்துரையாடலின் பின்னர் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடந்த 2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் இங்கே பயங்கரமான சூழல் நிலவியது. ஆனால் இப்போது அனைவருக்கும் சுதந்திரமா வாழக்கூடிய நிலைமையை ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் பெற்றுக் கொடுத்துள்ளோம். அதேபோல் உங்களுக்கு நிலவும் பிரச்சினைகளுக்கும் விரைவில் தீர்வினை பெற்றுக்கொடுப்போம் என்றார்.