சீனாவின் பட்டுப்பாதையின் ஊடாக இலங்கை மேலும் எதிர்ப்பார்க்கிறது!

Report Print Ajith Ajith in அரசியல்

சீனாவின் பட்டுப்பாதை திட்டத்தின் ஊடாக இலங்கை மேலும் நன்மைகளை எதிர்ப்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க இதனை தெரிவித்துள்ளார். சீனாவின் சின்குவா செய்திசேவைக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக்குறிப்பிட்டுள்ளார்.

சீனாவுடன் இலங்கை நீண்டக்கால உறவைக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் சீனாவின் பட்டுப்பாதை திட்டத்துக்கு ஆதரவு வழங்கிய முதன்மை நாடுகளில் இலங்கையும் அடங்கும் என்று அமரதுங்க தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் அந்த திட்டத்தின் ஊடாக மேலும் பல நன்மைகளை இலங்கை எதிர்ப்பார்ப்பதாக அமைச்சர் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் புதிய யோசனைகளை சீனாவிடம் முன்வைக்கவுள்ளதாகவும் ஜோன் அமரதுங்க கூறியுள்ளார்.