ஐ.நாவில் இருந்து வடக்கு கிழக்கு ஆயர்களிடம் பகிரங்க கோரிக்கை!

Report Print Dias Dias in அரசியல்

மனித உரிமைகள் விவகாரத்தில் மனித உரிமைகள் சபையின் எவ்விதமான முன்னேற்றங்களும் ஏற்படவில்லை என அவுஸ்ரேலியாவில் இருந்து வருகை தந்திருக்கும் அருட்தந்தை யோடன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 40ஆவது மனித உரிமைகள் கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக வருகை தந்திருந்த நிலையில் லங்காசிறிக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

கடந்த இரண்டு வருடங்களுக்கு முதல் மனித உரிமைகள் சபை இலங்கை அரசாங்கத்திற்கு மேலதிகமாக இரண்டு வருடங்கள் கேட்டு கொடுக்கப்பட்டிருந்தன. இருப்பினும் இவர்களுக்கு கிடைக்கப்பெற்ற காலத்தில் இவர்கள் எவ் விதமான செயற்பாடுகளையும் நிறைவேற்றியதாக சரித்திரம் இல்லை.

இருப்பினும் இவர்கள் ஒரு விடயத்தை மட்டும் செய்துள்ளனர், இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகங்களை திறந்துள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் திறக்கப்பட்டிருந்தாலும் அதிலும் அவர்கள் எவ்விதமான வேலைகளையும் செய்யதார்கள் என குறிப்பிடுவதற்கான எவ்வித அறிக்கைகளும் இல்லை.

இது இவ்வாறிருக்க இம்முறை இடம்றெவுள்ள ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் சங்கத்திலும் இவர்களுக்கு மீண்டும் இரண்டு வருட கால அவகாசம் வழங்கப் போவதாக தான் பல நாடுகள் கருத்துக்கள் தெரிவித்துள்ளன.

தற்போது இருக்கும் சூழலில் இலங்கை அரசுக்கு கால நீடிப்பு வழங்குவதில் இணை அனுசரணையாளர்களாக கனடா மற்றும் பிரித்தானியா இருக்கின்றது.

இவ்வாறு இருக்க சர்வதேச நாடுகள் இலங்கை அரசை வற்புறுத்த முடியாத நிலை காணப்படுகின்றது. ஐக்கிய நாடு சபையாகவே இயங்குகின்றன. எனவே ஐக்கிய நாடுகள் சபைக்கும் வற்புறுத்தும் அதிகாரம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.